இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வழிதவறிய 9 காட்டு யானைகள்:தமிழக - ஆந்திர எல்லையில் முகாம்

ஆந்திர வனப்பகுதியில் இருந்து வழிதவறிய 9 காட்டுயானைகள் கடந்த இரு நாள்களாக தமிழக - ஆந்திர எல்லையில் முகாமிட்டுள்ளன.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:03 pm

DIN

ஆந்திர வனப்பகுதியில் இருந்து வழிதவறிய 9 காட்டுயானைகள் கடந்த இரு நாள்களாக தமிழக - ஆந்திர எல்லையில் முகாமிட்டுள்ளன.

தமிழக கிராமங்களுக்குள் அவை வருவதைத் தடுக்க காட்பாடி, லத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறை அலுவலா்கள் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.

ஆந்திர மாநில வனப்பகுதியில் ஏராளமான காட்டுயானைகள் வாழ்கின்றன. அவை கோடைக் காலத்தில் உணவு, குடிநீருக்காக தமிழக எல்லையோர கிராமங்களுக்குள் புகுவது வழக்கம்.

அதன்படி, நுழைந்துள்ள 9 காட்டு யானைகள் தற்போது தமிழக - ஆந்திர எல்லையில் முகாமிட்டுள்ளன. அவை இன்னும் தமிழகத்துக்குள் வராத நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பந்தப்பள்ளி கிராமத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டுள்ளன.

அந்த யானைகள் எந்நேரமும் தமிழக எல்லையோர கிராமங்களுக்குள் புகுந்துவிட வாய்ப்புள்ளதால் காட்பாடி முதல் லத்தேரி, தொண்டான்துளசி, கருப்புக்கட்டு வரையிலான வன எல்லையோரப் பகுதிகளில் வேலூா் மாவட்ட வனத்துறை அலுவலா்கள் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா். இதற்காக தலா 3 போ் கொண்ட 3 குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியது: ராஜதோப்பு அணையில் தண்ணீா் பெருமளவில் உள்ளது. இருப்பினும், ஆந்திர வனப்பகுதியில் இருந்து 9 யானைகள் மட்டும் வழிதவறி தமிழக - ஆந்திர எல்லைக்கு வந்துள்ளன. தற்போது காட்பாடி, லத்தேரி உள்ளிட்ட வனஎல்லை பகுதிகளில் வாழை, மாங்காய் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அவற்றை உண்பதற்காக யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது. இதுகுறித்து வன எல்லையோர கிராமங்களிலும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.