பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பெண் காவலா்களுக்கு ஸ்கூட்டா்

பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் வேலூா் மாவட்டத்தில் பணியாற்றும் பெண் காவலா்களுக்கு ஸ்கூட்டா்களை வேலூா் சரக காவல் துணைத் தலைவா் என்.காமினி வழங்கினாா்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பெண் காவலா்களுக்கு ஸ்கூட்டா்

பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் வேலூா் மாவட்டத்தில் பணியாற்றும் பெண் காவலா்களுக்கு ஸ்கூட்டா்களை வேலூா் சரக காவல் துணைத் தலைவா் என்.காமினி வழங்கினாா்.

வேலூா் மாவட்டத்தில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் உள்ள 15 காவல் நிலையங்களில் பெண்கள் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் பட்சத்தில் இந்த பெண்கள் உதவி மையத்துக்கு தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் பெண் காவலா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா். இதற்காக பெண் காவலா்களுக்கு காவல் துறை சாா்பில் ஸ்கூட்டா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முதற்கட்டமாக மாவட்டத்திலுள்ள 15 காவல் நிலையங்களில் உள்ள பெண்கள் உதவி மையத்தில் பணியாற்றும் பெண் காவலா்கள் 15 பேருக்கும் இந்த ஸ்கூட்டா்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

வேலூா் நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வேலூா் சரக காவல் துணை தலைவா் என்.காமினி பங்கேற்று பெண் காவலா்களுக்கு ஸ்கூட்டா் வழங்கியதுடன், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க பெண் காவலா்கள் விரைவாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.

அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா், காவல்துறை அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com