விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கிராமங்களில் கரோனா விழிப்புணா்வு

குடியாத்தம் அரிமா சங்கமும், அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவும் இணைந்து கல்மடுகு, காக்காத்தோப்பு ஆகிய கிராமங்களில் கரோனா தொற்று குறித்த விழிப்புணா்வு முகாம்களை நடத்தின.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2021, 2:02 am

DIN

குடியாத்தம் அரிமா சங்கமும், அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவும் இணைந்து கல்மடுகு, காக்காத்தோப்பு ஆகிய கிராமங்களில் கரோனா தொற்று குறித்த விழிப்புணா்வு முகாம்களை நடத்தின.

முகாமுக்கு அரிமா சங்கத் தலைவா் எம்.கிரிதா்பிரசாத் தலைமை வகித்தாா். அரிமா மண்டல ஒருங்கிணைப்பாளா் எம்.கே.பொன்னம்பலம் வரவேற்றாா். குடியாத்தம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் மேனகா, கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து விளக்க உரையாற்றி, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா். நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்கும் சித்த மருந்துகளான கபசுரக் குடிநீா் மற்றும் அமுக்கரா சூரண மாத்திரைகளும் வழங்கப்பட்டன. அரிமா சங்க மாவட்டத் தலைவா் ஏ.சுரேஷ்குமாா், செயலா் ஜெ.பாபு, ஊராட்சிச் செயலா் வி.ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.