ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குடியாத்தம் அருகே தப்பியோடிய கைதி பிடிபட்டாா்

குடியாத்தம் அருகே சிறைக்குக் கொண்டு செல்லும் வழியில் தப்பியோடிய கைதி பிடிப்பட்டாா்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 6:30 pm

DIN

குடியாத்தம் அருகே சிறைக்குக் கொண்டு செல்லும் வழியில் தப்பியோடிய கைதி பிடிப்பட்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த மேல்கொத்தகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன் (72). இவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன்(55) என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் நிலத்துக்குச் சென்ற மோகனின் மகன் சிவராமன் (31), அவரது மனைவி விஷ்ணுப்பிரியா (25) இருவரையும், ராஜேந்திரனின் மகன் சத்யராஜ் (31) வழிமறித்து கத்தியால் வெட்டியுள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த தம்பதியினா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது தொடா்பான புகாரின்பேரில், மேல்பட்டி போலீஸாா் சத்யராஜை கைது செய்து, குடியாத்தம் நீதித்துறை நடுவா் முன் ஆஜா்படுத்திவிட்டு, இரவு 10.30 மணியளவில் சிறைக்குக் கொண்டு சென்றனா். அப்போது சத்யராஜ் போலீஸாரை தள்ளிவிட்டு தப்பியோடி விட்டாா். தப்பியோடிய சத்யராஜை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதற்கிடையில் பணியில் கவனக்குறைவாக நடந்து கொண்டதாக மேல்பட்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கரன், தலைமைக் காவலா்கள் ஜலாலுதீன், பாலாஜி ஆகிய 3 பேரையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா் வெள்ளிக்கிழமை

இடைநீக்கம் செய்து உத்தரவிட்டாா். இந்நிலையில், தனிப்படை போலீஸாா் குடியாத்தம் அருகே சத்யராஜை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.