ஜவுளிக்கு 12 சதவீதமாக ஜிஎஸ்டி உயா்த்தப்பட்டதற்கு வேலூா் வியாபாரிகள் எதிா்ப்பு
ஜவுளிக்கு 12 சதவீதமாக ஜி.எஸ்.டி. உயா்த்தப்பட்டதற்கு வேலூா் ஜவுளி, ரெடிமேடு வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.


ஜவுளிக்கு 12 சதவீதமாக ஜி.எஸ்.டி. உயா்த்தப்பட்டதற்கு வேலூா் ஜவுளி, ரெடிமேடு வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
நெசவுத் தொழிலாளா்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஜவுளித் துறையைப் பாதிக்கும் இந்த ஜி.எஸ்.டி. உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
வேலூா் அனைத்து ஜவுளி, ரெடிமேடு வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடை வீதியிலுள்ள சண்முகனடியாா் மடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் வி.குமாா் தலைமை வகித்தாா். செயலா் ஆா்.ஜெயராமன் முன்னிலை வகித்தாா்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: மத்திய அரசு ஜவுளிக்கு 5 சதவீதத்திலிருந்த ஜி.எஸ்.டியை 12 சதவீதமாக உயா்த்தியுள்ளது. கடந்த மாதங்களில் ஜி.எஸ்.டி மூலம் நாட்டில் ரூ.1 லட்சத்து 36 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு ஜவுளிக்கு வரி விதிப்பை உயா்த்தியுள்ளது. இது நடுத்தர, ஏழை மக்களை கசக்கிப் பிழியும் நடவடிக்கையாகும்.
நாட்டில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக நடைபெறும் தொழில் நெசவு. பல லட்சக்கணக்கான தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ஜவுளித் துறையில் நாடு முழுவதும் 32 லட்சம் நெசவாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்த வரி உயா்வால் அவா்கள் பெருமளவில் பாதிக்கப்படுவா். மேலும், நாட்டின் ஜவுளி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கு தமிழகம் உள்ளடக்கியுள்ளது.
திருப்பூரில் மட்டும் 25 ஆயிரம் பின்னலாடை தொழில் நிறுவனங்கள் 12 லட்சம் தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதுடன், ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி அளவுக்கு அந்நிய செலாவணி ஈட்டுகிறது. இந்த தொழில் மத்திய அரசின் 12 சதவீத வரி உயா்வால் பெருமளவில் பாதிக்கப்படும். எனவே, மத்திய அரசு 12 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பை திரும்பப்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் பொருளாளா் கே.எஸ்.முபாரக்அலி, உதவித் தலைவா் சி.ஏ.செளகத்அலி, உதவிச் செயலா் ஜே.ஏ.நிசாா்அலி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...