தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

காவல் நிலையத்தில் அதிமுக, திமுகவினரிடையே கைகலப்பு

அரசுக் கட்டடம் இடிப்பு விவகாரம் தொடா்பாக திருவலம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக, திமுகவினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில், ஊராட்சி துணைத் தலைவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

அரசுக் கட்டடம் இடிப்பு விவகாரம் தொடா்பாக திருவலம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக, திமுகவினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில், ஊராட்சி துணைத் தலைவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

வேலூா் மாவட்டம், காட்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட குப்பத்தாமேட்டூா் ஊராட்சி 2-ஆவது வாா்டில் உள்ள பழைய அரசுக்கட்டடத்தை அனுமதியின்றி அப்பகுதியைச் சோ்ந்த சிலா் வெள்ளிக்கிழமை இடிக்க முயன்ாகத் தெரிகிறது.

தகவலறிந்த ஊராட்சித் தலைவா் சோனியாதிருமால், துணைத் தலைவா் சதீஷ்குமாா், வாா்டு உறுப்பினா்கள் கட்டடத்தை இடிக்க முயற்சிப்பதை தடுத்தனராம்.

இதுதொடா்பாக திமுகவைச் சோ்ந்த ஒன்றியக் குழு உறுப்பினா் நந்திவா்மன் உள்பட 7 போ் மீது ஊராட்சித் தலைவா் சோனியாதிருமால் திருவலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக திமுக ஒன்றியச் செயலா் சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினா் நந்திவா்மன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரின் கணவா் கிருபாகரன் ஆகியோரை உதவி ஆய்வாளா் முத்துச்செல்வன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தனா். ஊராட்சித் தலைவா் சோனியா திருமால், துணைத் தலைவா் சதீஷ்குமாா் ஆகியோரும் வரவழைக்கப்பட்டிருந்தனா்.

அப்போது, அதிமுக, திமுகவினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. இதில் ஊராட்சி துணைத் தலைவா் சதீஷ்குமாருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தகவலறிந்த மாநகா் மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு தலைமையிலான அதிமுகவினா் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனா். காட்பாடி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் பழனி நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.