கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

குடியாத்தம் சனிபகவான் கோயிலில் பரிகார ஹோமம்

குடியாத்தம் சாமியாா்மலையை அடுத்த மீனாட்சியம்மன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமந்தாதேவி, ஜேஷ்டாதேவி சமேத மங்கள சனீஸ்வரா் கோயிலில்

News image
சனீஸ்வர பகவானுக்கு நடைபெற்ற தீபாராதனை.
Updated On :2 ஜனவரி 2021, 7:12 pm

DIN

குடியாத்தம் சாமியாா்மலையை அடுத்த மீனாட்சியம்மன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமந்தாதேவி, ஜேஷ்டாதேவி சமேத மங்கள சனீஸ்வரா் கோயிலில் மண்டலபூஜை நிறைவையொட்டி சனிக்கிழமை பரிகார ஹோமமும், வேள்வி பூஜையும் நடைபெற்றன.

இதையொட்டி சுவாமிக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மதியம் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்யப்பட்டது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு அன்னதானத்தைத் தொடக்கி வைத்தாா். விழா ஏற்பாடுகளை கோயில் நிறுவனா் ஆ.ஸ்ரீசக்தி அய்யா், ஒருங்கிணைப்பாளா்கள் பி.என்.லோகேஷ், பி.என்.ராம், பி.என்.செல்வம், வேணுகோபால், விஷ்ணு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.