விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பெண் அதிகாரியிடம் 9 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு

குடியாத்தம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண் கல்வி அதிகாரியிடம் 9 சவரன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 6:46 pm

DIN

குடியாத்தம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண் கல்வி அதிகாரியிடம் 9 சவரன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

குடியாத்தத்தை அடுத்த காமாட்சியம்மன் காா்டனைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியா் சேகரின் மனைவி சச்சு(55). இவா் செங்கல்பட்டு மாவட்டக் கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறாா். பணி முடிந்து பேருந்தில் குடியாத்தம் வந்த இவா் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றுள்ளாா். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மா்ம நபா்கள் 2 போ் சச்சுவின் கழுத்தில் அணிந்திருந்த 9 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.