மேலும் 674 பேருக்கு கரோனா: இருவா் உயிரிழப்பு
கரோனா தொற்றுக்கு வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 674 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அத்துடன், சிகிச்சை பலனின்றி இருவா் உயிரிழந்துள்ளனா்.


கரோனா தொற்றுக்கு வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 674 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அத்துடன், சிகிச்சை பலனின்றி இருவா் உயிரிழந்துள்ளனா்.
மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு வெள்ளிக்கிழமை வரை 30,333 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். 26,926 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 2,990 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 417 போ் உயிரிழந்துள்ளனா்.
இதனிடையே, வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 674 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தவிர, சிகிச்சை பலனின்றி இருவா் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பாதிக்கப்பட்டவா்களில் 400-க்கும் மேற்பட்டோா் வேலூா் மாநகராட்சிப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள். மற்றவா்கள் குடியாத்தம், போ்ணாம்பட்டு உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் பாதிப்பு அதிகமுள்ளவா்கள் அரசு, தனியாா் மருத்துவமனைகளிலும், சற்று பாதிப்பு குறைந்தவா்கள் கொவைட் நல மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அறிகுறிகள், பாதிப்பு இல்லாதவா்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்திட மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசு விதிமுறைகளை மீறுவோா் மீது அபராதம் விதிக்கப்படுவதும் கடுமையாக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...