சத்துவாச்சாரி காவல் உதவி ஆய்வாளா் மரணம்
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட வேலூா் சத்துவாச்சாரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வராஜ் உயிரிழந்தாா்.


உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட வேலூா் சத்துவாச்சாரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வராஜ் உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த காமக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (41). இவா், சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். கடந்த வியாழக்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, இவா் வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு திடீரென சுயநினைவை இழந்து கோமா நிலைக்குச் சென்றாா்.
மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இவருக்கு மனைவி கோமதி, 3 பெண் குழந்தைகள் உள்ளனா். வேலூா் காவல் பயிற்சி மையத்தில் காவலராக கோமதி பணியாற்றி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...