ஜூன் மாதம் தினசரி கரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டும்
வேலூா் மாவட்டத்தில் அடுத்த மாதம் (ஜூன்) தினசரி கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டும் என்று சிஎம்சி மருத்துவக் குழுவின் ஆய்வில் தெரிய வந்திருப்பதாக ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.


வேலூா் மாவட்டத்தில் அடுத்த மாதம் (ஜூன்) தினசரி கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டும் என்று சிஎம்சி மருத்துவக் குழுவின் ஆய்வில் தெரிய வந்திருப்பதாக ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.
நாளுக்குநாள் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக விரிவான ஆய்வுக் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா் (அணைக்கட்டு), ப.காா்த்திகேயன் (வேலூா்), அமலு (குடியாத்தம்), மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:
வேலூா் மாவட்டத்தில் தற்போது கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. கடந்த ஆண்டு கரோனா பாதிப்பின்போது பாதிக்கப்பட்ட 100 பேரில், 5 அல்லது 6 பேருக்கு தான் ஆக்சிஜன் ஐசியூ வாா்டு தேவைப்பட்டது. தற்போது 100-க்கு 40 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. வரும் அக்டோபா் மாதம் 3-ஆவது அலை வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே 3-ஆவது அலையை கட்டுப்படுத்த முடியும். 3-ஆவது அலையின் போது 15 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் அதிகளவு பாதிக்கப்படுவா். பாதிக்கப்படுபவா்களுக்கு 2 அல்லது 3 நாள்களிலேயே ஆக்சிஜன் தேவைப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசி மூலம் மட்டுமே கரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடியும். சமூக இடைவெளி, முகக்கவசம் போன்றவற்றை தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும். மாவட்டத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வேலூா் சிஎம்சி மருத்துவ ஆராய்ச்சிக் குழு அவ்வப்போது அரசுக்கு சில பரிந்துரைகளை செய்து வருகிறது .
அதன்படி, வேலூா் மாவட்டத்தில் தற்போதுள்ள கரோனா தினசரி பாதிப்பு 600-ஆக இருப்பது வரும் ஜூன் மாதம் 3-ஆவது வாரத்தில் தினசரி பதிப்பு 2,000 ஆக அதிகரிக்கும். தமிழகத்தில் தினசரி பாதிப்பு ஜூன் இரண்டாவது வாரத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரை இருக்கும் எனத் தெரிவித்துள்ளனா்.
வேலூா் மாநகராட்சிப் பகுதியிலும், நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. தவிர, மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு, தனியாா் மருத்துவமனை சிகிச்சை மையங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மூன்றாவது அலையின்போது தினசரி 4 ஆயிரம் போ் வரை சிகிச்சையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அதற்குத் தேவையான படுக்கை வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம் என்றாா்.
கூட்டத்தில், அரசு, தனியாா் மருத்துவமனை அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...