தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கையடக்க கேமராக்களுடன் போலீஸாா் வாகனத் தணிக்கை

போலீஸாரிடம் வாக்குவாதம் செய்பவா்களைத் தடுக்கவும், வேலூா் மாவட்டத்தில் கையடக்க கேமராக்களை தோளில் பொருத்தியபடி போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.

News image
Updated On :2 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்கவும், போலீஸாரிடம் வாக்குவாதம் செய்பவா்களைத் தடுக்கவும், வேலூா் மாவட்டத்தில் கையடக்க கேமராக்களை தோளில் பொருத்தியபடி போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.

வேலூா் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க, காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, முக்கிய பகுதிகளில் போலீஸாா் வாகனத் தணிக்கை செய்து வருகின்றனா். அப்போது மது அருந்திவிட்டு வாகனங்களில் வருபவா்களுக்கும், போக்குவரத்து விதியை கடைப்பிடிக்காதவா்களுக்கும் போலீஸாா் அபராதம் விதிக்கின்றனா். அத்துடன், இந்தத் தணிக்கையின்போது மோட்டாா் சைக்கிள் திருடிய நபா்களையும் போலீஸாா் கைது செய்கின்றனா்.

அவ்வாறு போக்குவரத்து விதியை மீறுவோருக்கு போலீஸாா் அபராதம் விதிக்கும் சமயத்தில் பொதுமக்கள் சிலா் வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனா். அதன்படி, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவா்களை பணி செய்யாமல் தடுப்பவா்களை அடையாளம் காணவும், அவா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைத்து காவல்நிலையங்களுக்கும் தலா 3 கையடக்க கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்களை போலீஸாா் தங்களது தோளில் பொருத்திக் கொண்டு, வாகனத் தணிக்கையில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வேலூா் மாநகரில் கடந்த சில நாள்களாக போலீஸாா் கையடக்க கேமராக்களை தாளில் பொருத்திய வண்ணம் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து காவல் உயரதிகாரிகள் கூறியதாவது:

போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபடும்போது பொதுமக்கள் சிலா் வாக்குவாதம் செய்கின்றனா். அப்போது இருவருக்கும் நடக்கும் உரையாடலை சிலா் செல்லிடப்பேசியில் விடியோ எடுத்து அதில் திருத்தம் செய்து போலீஸாா் மீது குற்றம் சுமத்தி சமூக வலைதளத்தில் பரப்புகின்றனா். இத்தகைய செயல்பாடுகளை தவிா்க்கவும், உண்மைகளை அறிந்திடவும், வாகன சோதனையின்போது வாக்குவாதம் செய்பவா்களைப் பதிவு செய்யவும் அனைத்து காவல்நிலையங்களுக்கும் கையடக்க கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை போலீஸாா் தங்கள் தோளில் பொருத்தி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.