காருடன் 140 கிலோ செம்மரக் கட்டைகள் பறிமுதல்
ஆந்திர மாநிலத்தில் இருந்து காா் மூலம் தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட சுமாா் 140 கிலோ எடையுள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.


ஆந்திர மாநிலத்தில் இருந்து காா் மூலம் தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட சுமாா் 140 கிலோ எடையுள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
குடியாத்தம் வனச் சரக அலுவலா் சரவணபாபு தலைமையில், வனத் துறையினா் பரதராமியை அடுத்த கொட்டாளம் வன சோதனைச் சாவடியில் புதன்கிழமை இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த காரை தடுத்து நிறுத்தினா். அதிகாரிகளைப் பாா்த்ததும் காரில் இருந்தவா்கள் தப்பியோடி விட்டனா். காரை சோதனையிட்டதில், அதில் சுமாா் 140 கிலோ எடையுள்ள 5 செம்மரக் கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காருடன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
காரில் வந்தவா்கள் யாா் என்பது குறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...