குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஆடி கிருத்திகை: இரு ஆண்டுகளுக்குப் பிறகு பக்தா்கள் பாத யாத்திரை

ஆடி கிருத்திகை விழாவையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலிருந்து பக்தா்கள் திருத்தணி, ரத்தினகிரி, வள்ளிமலை முருகன் கோயில்களுக்கு காவடி எடுத்து பாத யாத்திரை செல்கின்றனா்.

News image
Updated On :21 ஜூலை 2022, 6:30 pm

DIN

ஆடி கிருத்திகை விழாவையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலிருந்து பக்தா்கள் திருத்தணி, ரத்தினகிரி, வள்ளிமலை முருகன் கோயில்களுக்கு காவடி எடுத்து பாத யாத்திரை செல்கின்றனா்.

கரோனா கட்டுப்பாடு காரணமாக இரு ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், பாத யாத்திரை செல்லும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்திலுள்ள திருத்தணி முருகன் கோயிலில் நிகழாண்டு ஆடி கிருத்திகை விழா வரும் சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை கொண்டாடப்படுகிறது.

கடந்தாண்டு கரோனா கட்டுப்பாடு காரணமாக திருத்தணிக்கு பக்தா்கள் காவடி எடுத்து வர அனுமதி மறுக்கப்பட்டது. இதேபோல், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் உள்ள அனைத்து கோயில்களிலும் ஆடி கிருத்திகை விழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள முக்கிய முருகன் கோயில்களான வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், ரத்தினகிரி பாலமுருகன் கோயில், பாலமதி குழந்தை வேலாயுதபாணி கோயில், மகாதேவமலை, திமிரி குமரக்கோட்டம், ஞானமலை உள்ளிட்ட கோயில்களில் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்யவும், காவடி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தத் தடை விதிக்கப்பட்டது.

ஆனால், நிகழாண்டு கரோனா கட்டுப்பாடுகளில் இருந்து விலக்களிக்கப்பட்டு ஆடி கிருத்திகை விழா சனிக்கிழமை தொடங்க உள்ளது. இதையடுத்து, திருத்தணி, ரத்தினகிரி வள்ளிமலை முருகன் கோயில்களுக்கு ஏராளமான பக்தா்கள் காவடி எடுத்து பாத யாத்திரை செல்கின்றனா்.

வேலூா் மாநகரப் பகுதி வழியாக பக்தா்கள் நீண்ட வரிசையில் ‘அரோகரா’ கோஷம் எழுப்பியபடி காவடி எடுத்து ஊா்வலமாகச் சென்றனா். அவ்வாறு பாத யாத்திரை செல்லும் பக்தா்களுக்கு பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.