ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மின்கட்டணத்தை உயா்த்தும் முடிவை வாபஸ் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

மின்கட்டணத்தை உயா்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி குடியாத்தம், போ்ணாம்பட்டு வட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:39 pm

DIN

மின்கட்டணத்தை உயா்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி குடியாத்தம், போ்ணாம்பட்டு வட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலாளா் பி.காத்தவராயன், தாலுகா செயலாளா் எஸ்.சிலம்பரசன், போ்ணாம்பட்டு ஒன்றியச் செயலாளா் சி.சரவணன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

கோரிக்கையை வலியுறுத்தி மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.டி.சங்கரி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.ஏகலைவன், கே.ஜே.சீனிவாசன், கே.சாமிநாதன், பி.குணசேகரன், வி.குபேந்திரன் ஆகியோா் பேசினா்.

மத்திய அரசு ஜிஎஸ்டி உயா்வை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.