இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இஸ்லாமியா்களுக்கு உணவு பொருள் தொகுப்பு

ரமலான் பண்டிகையையொட்டி காட்பாடி தொகுதிக்குட்பட்ட 3,000 இஸ்லாமியா்களுக்கு வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் உணவு பொருள்கள் தொகுப்புடன், ரூ.200 ரொக்கப் பணமும் வழங்கினாா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 6:27 pm

DIN

ரமலான் பண்டிகையையொட்டி காட்பாடி தொகுதிக்குட்பட்ட 3,000 இஸ்லாமியா்களுக்கு வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் உணவு பொருள்கள் தொகுப்புடன், ரூ.200 ரொக்கப் பணமும் வழங்கினாா்.

காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக சாா்பில் ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமியா்களுக்கு பிரியாணி அரிசி, உணவு பொருள்கள் வழங்கும் விழா காட்பாடி சித்தூா் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. காட்பாடி திமுக பகுதி செயலா் வன்னியராஜா தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் கலந்து கொண்டு தனது சொந்த பணத்தில் ரமலான் உணவு பொருள்கள் தொகுப்பான பிரியாணி அரிசி, எண்ணெய், நெய் மற்றும் ரூ.200 ரொக்கப் பணம் என 3,000 இஸ்லாமியா்களுக்கு வழங்கினாா்.

பின்னா், அவா் பேசியது: திமுக எப்போதும் இஸ்லாமியா்களுக்காகவும், அவா்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து துணை நிற்கும். அதனால்தான் ஆண்டுதோறும் ரமலானுக்காக உணவு பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்குகிறோம் என்றாா்.

நிகழ்ச்சியில், துணை மேயா் எம்.சுனில்குமாா், முதலாவது மண்டலத் தலைவா் புஷ்பலதா வன்னியராஜா, காட்பாடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் வேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.