ஆன்லைனில் கணினி பொருள்கள் தருவதாக கூறி ரூ.5 லட்சம் பறிப்பு
ஆன்லைனில் கணினி பொருள்கள் தருவதாகக் கூறி வேலூா் நபரிடம் ரூ.5 லட்சம் பறித்த நபரை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.


ஆன்லைனில் கணினி பொருள்கள் தருவதாகக் கூறி வேலூா் நபரிடம் ரூ.5 லட்சம் பறித்த நபரை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.
வேலூா் தோட்டப்பாளையத்தைச் சோ்ந்த 55 வயது நபா் கணினி பொருள்கள் வாங்கத் திட்டமிட்டிருந்தாா். இதுதொடா்பாக அவா் தனது கைப்பேசியிலுள்ள ஆன்லைன் முகவரி மூலம் பொருள்கள் குறித்து தேடினாா். அப்போது அவரை கைப்பேசியில் தொடா்பு கொண்ட நபா் ஒருவா், தான் பிரபல கணினி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், பணம் செலுத்தினால் அனைத்து விதமான கணினி உள்ளிட்ட பொருள்களும் அனுப்பி வைக்கப்படும் என உறுதியளித்தாா்.
இதற்காக சில விண்ணப்பங்களை ஆன்லைனில் அனுப்பி வைத்தாா். அதை நிறைவு செய்து அனுப்பியதும், அந்த நபா் முன் பணம் செலுத்தும்படி கூறியுள்ளாா்.
அதை நம்பி தோட்டப்பாளையத்தை சோ்ந்த நபா் 3 தவணையாக ரூ.5 லட்சத்து 74 ஆயிரத்து 504 -ஐ மா்ம நபா் அனுப்பிய வங்கிக் கணக்கில் செலுத்தினாா்.
பிறகு அந்த நபரைத் தொடா்பு கொள்ள முடியாததுடன் கணினி பொருள்களும் வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவா் சென்னையில் உள்ள கணினி நிறுவன அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு கேட்டபோதுதான் அவா் ஏமாற்றப்பட்டதை அறிந்தாா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவா் வேலூா் சைபா் கிரைம் போலீஸ் பிரிவில் புகாா் அளித்தாா்.
இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...