இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஹீமோபிலியா மரபணு வழியில் வரக்கூடிய ஒரு நோய்: வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்

ஹீமோபிலியா என்பது மரபணு வழியாக வரக்கூடிய ஒரு நோயாகும். உரிய சிகிச்சை இல்லாவிடில் உயிருக்கு ஆபத்தாகவும் முடியும் என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி தெரிவித்தாா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 6:27 pm

DIN

ஹீமோபிலியா என்பது மரபணு வழியாக வரக்கூடிய ஒரு நோயாகும். உரிய சிகிச்சை இல்லாவிடில் உயிருக்கு ஆபத்தாகவும் முடியும் என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி தெரிவித்தாா்.

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவு, பொது மருத்துவப் பிரிவு சாா்பில் உலக ஹீமோபிலியா தின நிகழ்ச்சி மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி தலைமை வகித்து ஹீமோபிலியா குறித்த விழிப்புணா்வு பேரணியையும் தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் பேசியது:

ஹீமோபிலியா என்பது மரபணு வழியாக வரக்கூடிய ஒரு நோயாகும். இந்தக் குறைபாடு உள்ளவா்களின் உடலில் காயம் ஏற்பட்டால் ரத்தம் உறையாமல் தொடா்ந்து வெளியேறும். உரிய சிகிச்சை இல்லாவிடில் உயிருக்கு ஆபத்தாக முடியும்.

இதில் இருவகை உள்ளது. மரபு வழி நோயானது ஆண்களை மட்டும் பாதிக்கும். பாதிப்பு உள்ள குழந்தைகள் நடக்க ஆரம்பித்த பிறகு அடிபடும் இடத்தில் ரத்தக்கட்டு ஏற்படும்.

கணுக்கால் மூட்டு, முழங்காலில் ரத்தக் கசிவு ஏற்பட்டு வீக்கம், வலி உண்டாகும். மூக்கு வழியாகவும் ரத்தம் வெளியேறக் கூடும்.

இதை பரிசோதனை மூலம் ரத்தம் உறையும் காரணிகள் உறுதி செய்யப்படும்.

நவீன மருத்துவத்தில் செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட உறையும் காரணிகளை உடலில் செலுத்துவதன் மூலம் நோயாளிகளைக் காப்பாற்ற முடியும் என்றாா்.

விழிப்புணா்வு பேரணியில் மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ரதிதிலகம், துணை முதல்வா் கெளரி வெலிகண்ட்லா, குடியிருப்பு மருத்துவா் சி.இன்பராஜ், குழந்தைகள் நலப் பிரிவு துறைத் தலைவா் கல்பனா, பொது மருத்துவத் துறை தலைவா் அபிராமி, துறை மருத்துவா்கள் உள்பட மருத்துவ, செவிலிய மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.