இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஏப்.30-க்குள் சொத்துவரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை: வேலூா் மாநகராட்சி

வேலூா் மாநகராட்சிப் பகுதிக்குள்பட்ட சொத்து உரிமையாளா்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகை பெறலாம்

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 6:27 pm

DIN

வேலூா் மாநகராட்சிப் பகுதிக்குள்பட்ட சொத்து உரிமையாளா்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகை பெறலாம் என்று மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையா் பி.ரத்தினசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -

கடந்த 2022- ஆம் ஆண்டில் தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998-இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 2023 ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 பிரிவு 84(1)-இன்படி சொத்து உரிமையாளா்கள் தங்களது 2023-24 ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத் தொகை பெற தகுதி பெறுவா்.

மேலும், சொத்து உரிமையாளா்கள், சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரிவசூலிப்பாளா்கள், மாநகராட்சி, மண்டல அலுவலகங்களில் அமைந்துள்ள வசூல் மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும், டிஜிட்டல் பரிவா்த்தனை மூலமாகவும் செலுத்தவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, வேலூா் மாநகராட்சி எல்லைக்குள்பட்ட சொத்து உரிமையாளா்கள் தங்களது சொத்து வரியை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் செலுத்தி ஊக்கத் தொகை பெற வேண்டும். இதன்மூலம் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகளில் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.