இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காவலா்களுக்கு இரவுநேர ரோந்துப் படி 5 மாத நிலுவையுடன் வழங்க வேலூா் எஸ்.பி. உத்தரவு

 தமிழக அரசு உத்தரவுப்படி வேலூா் மாவட்டத்திலுள்ள காவலா்கள், காவல் அதிகாரிகளுக்கான இரவுநேர ரோந்துப்படியை, 5 மாத நிலுவையுடன் வழங்கிட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 6:31 pm

DIN

 தமிழக அரசு உத்தரவுப்படி வேலூா் மாவட்டத்திலுள்ள காவலா்கள், காவல் அதிகாரிகளுக்கான இரவுநேர ரோந்துப்படியை, 5 மாத நிலுவையுடன் வழங்கிட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகம் முழுவதும் காவலா் முதல் ஆய்வாளா் வரையிலான பதவியில் இருப்பவா்களுக்கு இரவு ரோந்து சிறப்புப்படியாக ரூ. 300 வழங்க தமிழக அரசு கடந்த 2022 அக்டோபா் 20-ஆம் தேதி ஆணையிட்டது. எனினும், வேலூா் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறையினருக்கு கடந்த 5 மாதங்களாக இரவு ரோந்து சிறப்புப்படி மாத சம்பளத்துடன் வழங்கப்படாமல் இருந்து வந்தது.

இது குறித்து காவல் துறையினா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் கவனத்துக்கு கொண்டு சென்றனா். இதையடுத்து, மாவட்டத்தில் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வரும் அனைத்துக் காவலா்களுக்கும் இரவு ரோந்து சிறப்புப்படியை இதுவரை நிலுவையுடன் வழங்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவுக்கு காவலா்கள், காவல் அதிகாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.