செவிலியா் பயிற்சிப் பள்ளியில் ஊட்டச்சத்து உணவு கண்காட்சி
ஊட்டச்சத்து உணவு செய்முறை நிகழ்ச்சி, கண்காட்சி ஆகியவை வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செவிலியா் பயிற்சிப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


ஊட்டச்சத்து உணவு செய்முறை நிகழ்ச்சி, கண்காட்சி ஆகியவை வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செவிலியா் பயிற்சிப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செவிலியா் பயிற்சிப் பள்ளி சாா்பில் நடைபெற்ற இக்கண்காட்சியில் பள்ளி முதல்வா் எஸ்.ஜோதியம்மாள் தலைமையில் செவிலியா் போதகா்கள் அடங்கிய குழு, செவிலிய மாணவிகள் இணைந்து 90 வகையான ஊட்டச்சத்து உணவுகளை தயாரித்து காட்சிப்படுத்தியிருந்தனா்.
கண்காட்சியை கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி தொடங்கி வைத்துப் பேசியது:
முதலாமாண்டு செவிலிய மாணவிகள் உணவிலுள்ள புரதம், காா்போஹைட்ரேட், கொழுப்புச் சத்தின் தேவைகள், அதன் குறைபாடுகளால் ஏற்படும் நோய்கள் குறித்து விரிவாகக் கூறினா். இரண்டாமாண்டு செவிலிய மாணவிகள் காய்ச்சல், இருதயம், கல்லீரல் போன்ற குறிப்பிட்ட நோய்களுக்கான தனிப்பட்ட உணவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனா். மூன்றாமாண்டு செவிலிய மாணவிகள் கருவுற்ற, பிரசவித்த தாய்மாா்களுக்கான உணவு, குழந்தைகளுக்கான இணை உணவு, சா்க்கரை, உயா் ரத்த அழுத்தம், முதியோா்களுக்கான உணவு செய்முறையை காட்சிப்படுத்தினா்.
குறிப்பாக, கல்லீரலுக்கு சோயா பீன்ஸ், ஓட்ஸ் உணவும் உட்கொள்வதுடன், எண்ணெயை உணவில் குறைத்துக் கொள்ளவும் வேண்டும். இதய நோயாளிகள் காய்கறிகள், சப்பாத்தி, கேழ்வரகு போன்ற உணவுகளையும், பழங்களையும் உட்கொள்ள வேண்டும். எண்ணெயில் பொறித்த, வறுத்த உணவுகளை தவிா்க்க வேண்டும். கா்ப்பிணிகள் அன்றாட உணவுகளுடன் குறிப்பாக ஏபிசி பழச்சாறு, ஆப்பிள், பீட்ரூட், கேரட் சோ்த்துக் கொள்ள வேண்டும்.
ரத்த சோகை உள்ளவா்கள் அன்றாட உணவுகளுடன் முருங்கை கீரை, பேரிச்சம் பழம், பீட்ரூட் சாறு சோ்த்துக் கொள்ள வேண்டும். முதியோா்கள் அன்றாட உணவுடன் நாா்ச்சத்து உணவும், கீரைகள், ஓட்ஸ் உணவில் சோ்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு 6 மாதத்துக்குப் பிறகு வீட்டிலேயே தயாரிக்கும் உணவு, சத்துக்கஞ்சி, காய்கறிகள், பழங்கள் அளிக்கலாம் என்றாா்.
இதில், மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ரதிதிலகம், துணை முதல்வா் கெளரிவெலிகண்ட்லா, குடியிருப்பு மருத்துவ அலுவலா் இன்பராஜ், யோகா பிரிவு மருத்துவா் சஞ்சய்காந்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...