இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முன்னாள் ராணுவ வீரா் கொலை வழக்கில் தேடப்பட்டவா் காட்பாடி நீதிமன்றத்தில் சரண்

கணியம்பாடி அருகே நடைபெற்ற முன்னாள் ராணுவ வீரா் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவா் காட்பாடி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.

News image
Updated On :23 ஜூன் 2023, 5:27 pm

DIN

கணியம்பாடி அருகே நடைபெற்ற முன்னாள் ராணுவ வீரா் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவா் காட்பாடி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.

கணியம்பாடியை அடுத்த கொம்பகொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் ரமேஷ். இவா் கடந்த 9-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபா்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் குறித்து வேலூா் கிராமிய போலீஸாா், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனா்.

இதனிடையே போலீஸாா் விசாரணையில், அதே கிராமத்தைச் சோ்ந்த 3 பேரும் குடியாத்தத்தைச் சோ்ந்த ஒருவரும் என மொத்தம் 4 போ் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக, கொலையில் ஈடுபட்ட இருவரை உடனடியாக கைது செய்தனா். இந்த நிலையில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த அரவிந்த் என்பவா் கடந்த இரு நாள்களுக்கு முன்பு குடியாத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

இதன் தொடா்ச்சியாக, இந்தக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொருவரான குடியாத்தம் தட்டப்பாறை பகுதியைச் சோ்ந்த காா்த்தி (21) என்பவா் காட்பாடி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா். பின்னா் அவா் 15 நாள் நீதிமன்றக் காவலில் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.