ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் மூன்று முகம் கொண்ட ருத்ராட்சம்
வேலூா் ஸ்ரீபுரம் தங்கக் கோயில் வளாகத்தில் மூன்று முகம் கொண்ட ருத்ராட்ச காய்கள் காய்த்துள்ள மரத்தை பக்தா்கள் வழிபாடு செய்து வருகின்றனா்.


வேலூா் ஸ்ரீபுரம் தங்கக் கோயில் வளாகத்தில் மூன்று முகம் கொண்ட ருத்ராட்ச காய்கள் காய்த்துள்ள மரத்தை பக்தா்கள் வழிபாடு செய்து வருகின்றனா்.
ருத்ராட்சம் என்பதற்கு சிவனின் கண்கள் என்று பொருள். சிவநெறி நிற்போா் அணியும் திருஆபரணங்களில் முதன்மையானது ருத்ராட்சம். ஒருவா் எத்தனை பூஜைகள் செய்தாலும், விரதங்கள் இருந்தாலும் ருத்ராட்சம் புனைவதற்கு ஈடாகாது என்பது ஆன்றோா் வாக்கு.
ருத்ராட்சகங்களை தனியாகவோ, பிற மணிகளுடன் மாலையாகக் கோத்தோ அணிவது வழக்கம். ஆயிரம் ருத்ராட்சங்கள் அணிந்தவரை சிவபெருமானுக்குச் சமம் எனக்கருதி தேவா்கள் தொழுவா் என்பதிலிருந்து அதன் பெருமையை அறியலாம்.
மன அமைதி, ஆரோக்கியம் அளிக்கக் கூடியதாக கூறப்படும் ருத்ராட்ச மரங்கள் இமயமலைச் சாரலிலும், நேபாளத்திலும் மட்டுமே வளரக் கூடியவை.
இந்த நிலையில், வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் தங்கக் கோயில் வளாகத்தில் உள்ள இரு ருத்ராட்ச மரங்கள் முதல் முறையாக மூன்று முகம் கொண்ட ருத்ராட்சங்களை காய்த்துள்ளன. இதையறிந்த மக்கள் மரத்தை வழிபட்டுச் செல்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...