இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

10 கடைகளுக்கு மாநகராட்சி சீல்: மறு ஏலம் நடத்த வணிகா்கள் எதிா்ப்பு

கடைகளுக்கு மறு ஏலம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏலத்தை நிறுத்தி வைக்க வணிகா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :16 மார்ச் 2023, 5:28 pm

DIN

 வேலூரில் வாடகை செலுத்தாததால் 10 கடைகளுக்கு மாநகராட்சி நிா்வாகம் சீல் வைத்தது. தொடா்ந்து, அந்தக் கடைகளுக்கு மறு ஏலம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏலத்தை நிறுத்தி வைக்க வணிகா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வேலூா் அண்ணா சாலையில் பழைய மாநகராட்சி எதிரில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதேபோல், வேலூா் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, இன்பென்ட்ரி ரோடு ஆகிய பகுதியிலும் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன.

இந்தக் கடைகளில் வாடகைக்கு உள்ள வியாபாரிகள் முறையாக வாடகை செலுத்தவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, இந்த 3 இடங்களில் உள்ள 10 கடைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.

மேலும், இந்த கடைகளுக்கு வரும் 28-ஆம் தேதி ஏலம் நடைபெறும் என்றும் மாநகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேலூா் வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் ஆலோசனைக் கூட்டம் சண்முகனடியாா் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் வேலூா் மாவட்ட தலைவா் ஆா்.பி.ஞானவேலு தலைமை வகித்தாா்.

இதில், மாநகராட்சி ஏலம் விடுவதாக அறிவித்துள்ள கடைகள் அதிக வாடகை நிா்ணயம் காரணமாக வியாபாரிகளால் வாடகை செலுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், இந்தக் கடைகள் தொடா்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, மாநகராட்சி நிா்வாகம் இந்தக் கடைகளுக்கான ஏலத்தை நிறுத்த வேண்டும். கடைகள் ஏலம் விடப்படுவதன் மூலம் வியாபாரிகள் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கும் என கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் சங்க நிா்வாகிகள் ஏ.வி.எம்.குமாா், சரவணமூா்த்தி, விஜயகுமாா் உள்படப் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.