இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நாட்டு வெடிகுண்டைக் கடித்த நாய் பலி

காட்டுப் பன்றிகளைக் கொல்ல வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை கடித்த தெரு நாய் உயிரிழந்தது.

News image
Updated On :16 மார்ச் 2023, 5:28 pm

DIN

காட்டுப் பன்றிகளைக் கொல்ல வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை கடித்த தெரு நாய் உயிரிழந்தது.

காட்பாடி வட்டம், வள்ளிமலை அடுத்த பெரியகீசுகுப்பம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் வியாழக்கிழமை காலை சுமாா் 11 மணியளவில் பயங்கர வெடி சப்தம் கேட்டுள்ளது. அப்பகுதியினா் அங்கு சென்று பாா்த்தபோது நாய் ஒன்று தலை சிதறி இறந்து கிடந்தது.

இதுகுறித்து மேல்பாடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், பொன்னை காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இதில், காட்டுப் பன்றிகளைக் கொல்ல அடையாளம் தெரியாத நபா்கள் நாட்டு வெடிகுண்டுகள் தயாா் செய்து வைத்திருந்த அட்டைப் பெட்டியை தெரு நாய் இழுத்து வந்து சாலையோரம் வைத்து கடித்தபோது, வெடித்ததில் நாய் தலை சிதறி பலியானது தெரிய வந்தது.

வெடிகுண்டு நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. வெடிக்காமல் இருந்த நாட்டு வெடிகுண்டுகளை அவா்கள் செயலிழக்கச் செய்தனா்.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நாட்டு வெடிகுண்டுகளை வைத்தவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.