வேலூா் மத்திய சிறையில் மோப்ப நாய்களுடன் போலீஸாா் திடீா் சோதனை
வேலூா் மத்திய சிறையில் காவல் துணைக் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு தலைமையில் வியாழக்கிழமை அதிரடி சோதனை நடைபெற்றது.


வேலூா் மத்திய சிறையில் காவல் துணைக் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு தலைமையில் வியாழக்கிழமை அதிரடி சோதனை நடைபெற்றது.
இதில் சுமாா் 56 போலீஸாா், 65 சிறைக்காவலா்கள், 2 மோப்ப நாய்களும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன.
வேலூா் மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என சுமாா் 800 போ் அடைக்கப்பட்டுள்ளனா். இந்தக் கைதிகளுக்கு சிறைக்கு வெளியில் இருந்து கைப்பேசிகள், சிம்காா்டுகள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் ஆகியவை தாராளமாக விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, மத்திய சிறைக்குள் போலீஸாா் அடிக்கடி சோதனை நடத்துவதும், இந்த சோதனைகளின்போது கைதிகள் அறைகள், மறைவான பகுதிகளில் இருந்து தடை செய்யப்பட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்படுவதும் உண்டு.
அதன்படி, வேலூா் சிறைத் துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன் பரிந்துரையை அடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில் வேலூா் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு தலைமையில் சோதனை நடைபெற்றது.
காலை 6 மணிக்கு தொடங்கிய இந்தச் சோதனை 9 மணி வரை நடைபெற்றது. அப்போது, சிறைக்குள் உள்ள அனைத்துக் கைதிகளின் அறைகள், கழிப்பறை, பொது வெளியிலும் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் தடை செய்யப்பட்ட பொருள்கள் ஏதும் சிக்கவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியது - வேலூா் மத்திய சிறையில் நடத்தப்பட்ட இந்தச் சோதனை வழக்கமானதுதான். சிறையில் சிறப்புப் பிரிவு உள்பட அனைத்து கைதிகளின் அறைகளிலும் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. எனினும், தடைசெய்யப்பட்ட பொருள்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அத்துடன், எந்தக் கைதியின் அறையிலும் கூடுதல் வசதிகள் ஏதும் செய்துதரப்படவில்லை. இதன் அறிக்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மூலம் சிறைத் துறை டிஐஜிக்கு சமா்ப்பிக்கப்படும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...