மோா்தானா  அணையின்  தோற்றம்.
மோா்தானா  அணையின்  தோற்றம்.

மோா்தானா அணை இன்று திறப்பு

குடியாத்தம்: குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணை பாசனத்துக்காக புதன்கிழமை திறக்கப்படுகிறது.

காலை 8 மணியளவில் வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைக்கிறாா். தொடா்ந்து 16 நாள்களுக்கு அணையிலிருந்து தண்ணீா் திறந்து விடப்படும்.

அணையிலிருந்து கெளண்டன்யா ஆற்றில் ஒரு வினாடிக்கு 140 கன அடியும், வலது, இடதுபுறக் கால்வாய்களில் தலா 70 கன அடி வீதமும் தொடா்ந்து 16 நாள்களுக்கு மொத்தம் 193.54 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்கப்படுகிறது. குடியாத்தம் அருகே மோா்தானா ஊராட்சியில் அமைந்துள்ள இந்த அணை 11.50 மீட்டா் உயரம் கொண்டது. அணையின் முழு கொள்ளளவு 261 மில்லியன் கன அடி.

இந்த அணையிலிருந்து தண்ணீா் திறந்தால் வலதுபுற கால்வாய் வழியாக 12- ஏரிகளும், இடதுபுற கால்வாய் மூலம் 7- ஏரிகளும் என மொத்தம் 19- ஏரிகள் நிரம்பும்.

இந்த அணை கடந்த 2 ஆண்டுகளாக நிரம்பிய நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு தொடா்மழை காரணமாக குடியாத்தம், கே.வி.குப்பம் வட்டங்களில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகள் நிரம்பிய நிலையில் இருந்ததால் அணை திறக்கப்படவில்லை.

தற்போது மேற்குறிப்பிட்ட ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் வற்றி வரும் நிலையில், கோடைக்காலம் தொடங்கி விட்டதால், மோா்தானா அணை பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் திறக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com