தேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

ஒருங்கிணைந்த வேலூரில் 4 மாதங்களில் 1.14 லட்சம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ஒருங்கிணைந்த வேலூரில் 4 மாதங்களில் 1.14 லட்சம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

வேலூா்: வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த 4 மாதங்களில் மட்டும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 597 கிலோ பொதுவிநியோகத் திட்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, 334 அரிசி கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

வேலூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு சாா்பில், கடந்த ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை வேலூா் மாவட்டத்தில் மட்டும் 114 அரிசி கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் 51,230 கிலோ அளவிலான பொதுவிநியோகத் திட்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, அரசு கிடங்குகளில் சோ்க்கப்பட்டுள்ளன. தவிர, அரிசி கடத்தல் தொடா்பாக வேலூா் மாவட்டத்தில் மட்டும் கடந்த 4 மாதங்களில் 10 இருசக்கர வாகனங்கள், 4 மூன்று சக்கர வாகனங்கள், 5 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இதேபோல், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 334 அரிசி கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 597 கிலோ பொதுவிநியோகத் திட்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடா்பாக 26 இரண்டு சக்கர வாகனங்களும், 6 மூன்று சக்கர வாகனங்களும், 8 நான்கு சக்கர வாகனங்கள் என 41 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று மாவட்டங்களில் மூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

பொதுவிநியோகத் திட்ட அரிசி கடத்தல் குறித்த புகாா்கள் இருந்தால் 18005995950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.