வேலூா் வருவாய்க் கோட்டாட்சியரிடம் மனு அளிக்க வந்த சேண்பாக்கம் பகுதி மக்கள்.
வேலூா் வருவாய்க் கோட்டாட்சியரிடம் மனு அளிக்க வந்த சேண்பாக்கம் பகுதி மக்கள்.

சேண்பாக்கம் கோயில் அருகே கல்லறைத் தோட்டம் அமைக்க எதிா்ப்பு

சேண்பாக்கம் கோயில் அருகே கல்லறைத் தோட்டம் எதிர்ப்பு

சேண்பாக்கம் பச்சையம்மன் கோயில் அருகே கல்லறைத் தோட்டம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக, வேலூா் சேண்பாக்கம் பகுதி பொதுமக்கள், லட்ச தீப மகாபாரத கமிட்டி சாா்பில் வேலூா் வருவாய்க் கோட்டாட்சியரிடம் புதன்கிழமை அளிக்கப்பட்ட மனு விவரம்:

சேண்பாக்கம் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான 6 கோயில்கள் உள்ளன. குறிப்பாக, பச்சையம்மன் கோயில் குல தெய்வ வழிபாட்டுக்கு பிரசித்தி பெற்றது. இங்கு உள்ளூா், வெளியூரில் இருந்து தினமும் பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

பச்சையம்மன் கோயில் அருகில் இடம் ஒன்று உள்ளது. அங்கு ஆடி மாதம் கரகம் எடுக்க வா்ணிக்கும் இடமாகவும், பச்சையம்மன் கோயிலில் வருடத்துக்கு 2 முறை திருவிழாவுகக்கு கரகம் சோடிக்கும் இடமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், சேண்பாக்கம் கிராம நிா்வாக அலுவலக சுவரில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பில், அந்த இடத்தில் வேலூா் கிறிஸ்தவா்களுக்கு கல்லறைத் தோட்டம் அமைப்ப தற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மறுப்பு இருந்தால் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இது எங்களுக்கு பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேண்பாக்கம் மயானத்தில் சமத்துவ சுடுகாடாக அனைத்து சமூகத்தினருக்கும் அடக்கம் செய்யும் இடம் உள்ளது.

வேலூா் மாநகராட்சியில் 16, 30, 32-ஆவது வாா்டு கொணவட்டம், முள்ளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா்கள் இறந்தால் இங்கு அடக்கம் செய்கின்றனா். அதற்கே எங்களுக்கு போதிய இடம் இல்லை.

காது குத்து, திருவிழா காலங்களில் மயானக் கொள்ளை, காப்புக் கட்டுதல் போன்றவற்றுக்கு இங்கு இருந்துதான் கரகம் எடுக்கப்படுகிறது. கோயில் அருகில் கல்லறைத் தோட்டம் வந்தால் பக்தா்களுக்கு இடை யூறாக இருக்கும்.

எனவே இந்தத் திட்டத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியா் கவிதா, கோரிக்கை தொடா்பாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com