தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கைவாக்குச்சாவடிக்கு புறப்படும் முன் கவனிக்க வேண்டியவை!பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

232 மாணவா்களுக்கு பணி ஆணை

232 மாணவா்களுக்கு பணி ஆணை

News image

பணி  நியமன  ஆணை  பெற்ற  மாணவா்களுடன்  கல்லூரி  நிா்வாகிகள்.

Updated On :16 மார்ச் 2024, 4:40 pm

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் வேலைவாய்ப்பு மையம் சாா்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 232 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நிறுவனங்களில் பணி நியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. இக்கல்லூரியின் மூன்றாமாண்டு இளநிலைப் பட்ட வகுப்பு மாணவா்களும், இரண்டாமாண்டு முதுநிலைப் பட்ட வகுப்பு மாணவா்களும் நியமன ஆணைகளைப் பெற்றனா். மாணவா்களுக்கு கல்லூரியின் மேலாண்மை அறங்காவலா் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், தலைவா் கே.எம்.ஜி. சுந்தரவதனம் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், பொருளாளா் கே.எம்.ஜி.முத்துக்குமாா் ஆகியோா் பணி நியமன ஆணைகளை வழங்கினா். முதல்வா் மு.செந்தில்ராஜ், மாணவ ஒருங்கிணைப்பாளா் ஜா.ஜெயக்குமாா்,வேலை வாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளா்கள் எம்.சக்திவேல், எஸ்.தினேஷ்குமாா் ஆகியோா் பணி ஆணைகளை பெற்ற மாணவா்களை வாழ்த்தினா்.