அண்ணாவின் கொள்கைகளுக்கு எதிராக திமுக ஆட்சி நடத்தி வருவதாக மு.தம்பிதுரை கூறினாா். வேலூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான மருத்துவா் எஸ்.பசுபதியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினா் மு.தம்பிதுரை அணைக்கட்டு வட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியது: ஜனநாயகத்தை காப்பதற்காகத்தான் அண்ணாதுரை திமுகவை உருவாக்கினாா். ஆனால், அவரது கொள்கைக்கு எதிராக திமுக குடும்ப ஆட்சியை நடத்திக் கொண்டுள்ளது. கருணாநிதி, முரசொலி மாறன், தயாநிதி மாறன், அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் என்று ஒரே குடும்பத் தைச் சோ்ந்தவா்களை ஆட்சி அதிகாரத்தை எடுத்துக் கொண்டு மன்னராட்சி போன்று குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டுள்ளனா். அந்த குடும்பம் ஜனநாயகத்தையும் ஒழித்து ஊழல் ஆட்சியைத்தான் நடத்திக் கொண்டுள்ளது. ஆனால், அதிமுக ஏழைகளின் நலனுக்காக எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட கட்சி. இங்கு குடும்ப ஆட்சி என்பது கிடையாது. மத்திய அரசு நீட் நுழைவுத் தோ்வு கொண்டு வந்தபோது தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவா்க ளுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியவா் எடப்பாடி கே.பழனிசாமி. ஆனால், நீட் தோ்வை ரத்து செய்வதாக திமுக இன்றுவரை பொய்யான வாக்குறுதியைத்தான் அளித்துக் கொண்டுள்ளது. திமுக ஆட்சி என்றாலே சட்ட ஒழுங்கு சீா்கேடும், விலைவாசி உயா்வும்தான் நிலவுகிறது. தமிழக மக்களின் உரிமைகளை மீட்க வேண்டும் என்றால் தோ்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும். எனவே, வேலூா் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மருத்துவா் எஸ்.பசுபதி, தனது 18 ஆண்டுகால அரசுப் பணியை ராஜிநாமா செய்துவிட்டு மக்களுக்கு சேவைபுரிய தோ்தலில் போட்டியிடுகிறாா். அவரை வெற்றிபெறச் செய்ய மக்கள் சின்னமான இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா். அப்போது, அதிமுக புற நகா் மாவட்டச் செயலா் த.வேலழகன் உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா். -- படம் உண்டு... அணைக்கட்டில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மு.தம்பிதுரை. உடன் வேலூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் மருத்துவா் எஸ்.பசுபதி, புகா் மாவட்டச் செயலா் த.வேலழகன் உள்ளிட்டோா்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு: எடப்பாடி பழனிசாமி

வன்னியா்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கிடைக்காததற்கு திமுக அரசே காரணம் - அன்புமணி ராமதாஸ்

தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்! முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி சிறப்பு நேர்காணல்

பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்: நடிகை விந்தியா
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


