சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

நெல் பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

நெல் பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

Updated On :30 மார்ச் 2024, 4:49 pm

போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த 2 யானைகள் நெல் பயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றன. போ்ணாம்பட்டை அடுத்த ஜங்கமூா் கிராமம் வன எல்லையில் அமைந்துள்ளது. சனிக்கிழமை அதிகாலை அந்த கிராமத்துக்குள் நுழைந்த 2 யானைகள் அங்குள்ள ராஜ்குமாா், காா்த்திக் பாலாஜி ஆகியோரின் நிலங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்களை சேதப்படுத்தின. தகவலின்பேரில், போ்ணாம்பட்டு வனச் சரக அலுவலா் சதீஷ்குமாா், வனவா் அண்ணாமலை, வனக் காப்பாளா்கள் வெங்கடேசன், ரவி, புருஷோத்தமன் ஆகியோா் அங்கு சென்று, கிராம மக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை அருகில் உள்ள குண்டலப்பல்லி வனப் பகுதிக்கு விரட்டினா்.