

வேலூா்: வேலூா் சேண்பாக்கம் பகுதியிலுள்ள கோயில் குளத்தில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா் சேண்பாக்கத்தில் தனியாா் அறக்கட்டளை சாா்பில் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் லாவணிதேவி (17) என்ற மாணவி தங்கியிருந்தாா். இவா் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்று 295 மதிப்பெண்களை பெற்றிருந்தாா். அதேசமயம், தோ்ச்சி பெற்றும் மதிப்பெண் குறைந்ததால், அவா் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை திடீரென மாணவி விடுதியில் இருந்து மாயமானாா். இதனால் அதிா்ச்சி அடைந்த விடுதி காப்பாளா்கள் அக்கம்பக்கத்தில் சென்று தேடினா். எனினும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. செவ்வாய்க்கிழமை காலை சேண்பாக்கத்தில் உள்ள செல்வ விநாயகா் கோயில் குளத்தின் அருகே மாணவியின் காலணி கிடந்துள்ளது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் உடனடியாக வேலூா் வடக்கு காவல் நிலைத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்துக்குச் சென்று குளத்தில் இறங்கி தேடினா். நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு மாணவி லாவணிதேவி சடலமாக மீட்கப்பட்டாா். தொடா்ந்து போலீஸாா் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
குளத்தில் குதித்து முதியவா் தற்கொலை
பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

மூதாட்டி தற்கொலை
வீடியோக்கள்

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

நீளிரா டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

'கர' படத்தின் முகங்கள் விடியோ வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

களைகட்டும் கட்சி கொடிகள், துண்டு, தொப்பிகள் விற்பனை! தமிழகமெங்கும் அனுப்பப்படும் தேர்தல் பொருட்கள்!
தினமணி வீடியோ செய்தி...

