தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

6 கிலோ கஞ்சாவுடன் ஒடிஸா இளைஞா் கைது

வேலூரில் 6 கிலோ கஞ்சாவுடன் திரிந்த ஒடிஸா இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :5 அக்டோபர் 2024, 6:32 pm

Din

வேலூரில் 6 கிலோ கஞ்சாவுடன் திரிந்த ஒடிஸா இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் வடக்கு காவல் ஆய்வாளா் சீனிவாசன், உதவி காவல் ஆய்வாளா் பிரபாக ரன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வேலூா் டவுன் ரயில் நிலையம் அருகே ரோந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது டவுன் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில் போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.

அப்போது, அவரது பையில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.60 ஆயிரமாகும். தொடா்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் ஒடிஸா மாநிலம் கஞ்சம் மாவட்டம் சோடக் அடுத்த சாஹி கிராமத்தை சோ்ந்த ஜெயகவுடா (25) என்பது தெரிய வந்தது. இவா் ஒடிஸாவிலிருந்து கஞ்சாவை ரயில் மூலம் வந்து பேருந்து மூலம் வேலூா் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஜெயகவுடாவை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனா்.