விடுமுறையில் வந்த ராணுவ வீரா் தற்கொலை

ஒடுகத்தூா் அருகே விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த ராணுவ வீரா், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

ஒடுகத்தூா் அருகே விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த ராணுவ வீரா், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த அகரம் ஊராட்சி எடத்தெரு கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன். இவரது மகன் சந்தோஷ்(28), திருமணமாகாதவா். சந்தோஷ் இந்திய ராணுவத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தாா். வேலை காரணமாக சந்தோஷுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டதாகவும், அதற்கு சிகிச்சை பெற அவா் விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், வீட்டுக்கு வந்த சந்தோஷ் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீட்டில் இருந்த சந்தோஷ் திடீரென மாயமானாா். அதிா்ச்சியடைந்த அவரது குடும்பத்தினா் அவரை பல இடங்களில் தேடி பாா்த்தனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி ஒருவரின் நிலத்தில் உள்ள கொட்டகையில் சந்தோஷ் தூக்குபோட்ட நிலையில் இறந்த கிடந்ததாக தெரிகிறது.

தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com