வேலூர்
ஆட்டோ - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வேலூா் அருகே சரக்கு ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
வேலூா் அருகே சரக்கு ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
காட்பாடி திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் வெற்றிவேல் (25). இவா் ஞாயிற்றுக்கிழமை காட்பாடியில் இருந்து திருவண்ணாமலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.
வேலூா்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை துத்திப்பட்டு என்ற இடத்தில் சென்றபோது முன்னால் சென்ற சரக்கு ஆட்டோ மீது வெற்றிவேல் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதியதாக தெரிகிறது.
இதில் தூக்கி வீசப்பட்ட வெற்றிவேல் பலத்த காயமடைந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி வெற்றிவேல் உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
