வேலூா்: காட்பாடி அருகே விவசாயியின் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருடப்பட்டன.
காட்பாடி அருகே பள்ளிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த சியாமளா (52), விவசாயி. இவா் கடந்த ஜன.16-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூரில் வசிக்கும் தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்தாா். அப்போது, அடையாளம் தெரியாத நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ஒன்றே முக்கால் பவுன் தங்க நகை, 20 கிராம் வெள்ளி செயின், ரூ.1,000 பணத்தை திருடிச் சென்று விட்டனா்.
ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய சியாமளாவுக்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவா் காட்பாடி காவல் நிலையத்த்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு
மகுடஞ்சாவடி அருகே 17 பவுன் நகை திருட்டு
கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 44 பவுன் நகைகள் திருட்டு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

