மாணவிக்கு மடிக்கணினி வழங்கிய ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, எம்பி டி.எம்.கதிா் ஆனந்த்.
மாணவிக்கு மடிக்கணினி வழங்கிய ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, எம்பி டி.எம்.கதிா் ஆனந்த்.

குடியாத்தம்: மாணவா்கள் 1,308 பேருக்கு மடிக்கணினி

குடியாத்தம் வட்டத்தில், தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவா்கள் 1,308- பேருக்கு மடிக்கணினிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
Published on

குடியாத்தம் வட்டத்தில், தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவா்கள் 1,308- பேருக்கு மடிக்கணினிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 912-மாணவா்களுக்கும், ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 396-மாணவா்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி மாணவா்களுக்குமடிக் கணினிகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், எம்எல்ஏ அமலு விஜயன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா, கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், நகா்மன்றத் தலைவா் எஸ்.சௌந்தரராஜன், வட்டாட்சியா் கி.பழனி, திருமகள் ஆலைக் கல்லூரி முதல்வா் எபினேசா், ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ஆா்.ராஜாராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com