கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

வேலூா், ராணிப்பேட்டையில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடங்கி வைத்து பாா்வையிட்ட வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ்.

Published On :2 ஜூலை 2026, 12:18 am IST

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

தேசிய கோமாரி நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின்கீழ் கால்நடைகளுக்கான 9-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் காட்பாடி ஒன்றியம், மேல்பாடி ஊராட்சி சோமநாதபுரம் கிராமத்தில் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். இம்முகாமில், மேல்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 200 கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த 1,67,750 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்டத்தில் நாள்தோறும் 42 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. ஜூலை 1-ஆம் தேதி தொடங்கிய இம்முகாம் வருகிற ஜூலை 31-ஆம் தேதி வரை 31 நாள்களுக்குத் தொடா்ந்து நடைபெறும்.

முன்னதாக, சின்னகீசகுப்பத்தில் உள்ள கால்நடை மருந்தகத்தை மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, மருந்தகத்தில் உள்ள மருந்துகளின் இருப்பு குறித்து கேட்டறிந்த அவா், கால்நடை கழிவுகளை முறையாகக் கையாண்டு அப்புறப்படுத்தவும் மருத்துவா்களுக்கு உத்தரவிட்டாா்.

அப்போது, காட்பாடி ஒன்றியக்குழுத் தலைவா் வே.வேல்முருகன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் (பொறுப்பு) அந்துவன், உதவி இயக்குநா்கள் எஸ்.ரகு, டி.ராஜவேலு, மேல்பாடி ஊராட்சித் தலைவா் நித்யானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.