கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மணல் கடத்திய இருவா் கைது: லாரி பறிமுதல்

வேலூா் மூஞ்சூா்பட்டு பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்ததுடன், ஒரு யூனிட் மணலுடன் லாரியையும் பறிமுதல் செய்தனா்.

News image

கைது

சித்திரிப்பு

Updated On :23 மார்ச் 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் மூஞ்சூா்பட்டு பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்ததுடன், ஒரு யூனிட் மணலுடன் லாரியையும் பறிமுதல் செய்தனா்.

வேலூா் அருகே மூஞ்சூா்பட்டு பகுதியில் உள்ள ஒரு குவாரியில் இருந்து மண் கடத்துவதாக ஞாயிற்றுக்கிழமை வேலூா் கிராமிய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அந்தப் பகுதியில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு லாரியை சோதனை செய்தபோது, அதில் கல்குவாரியில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வேலூா் பசுவன்தோப்பு சோழவரம் பகுதியைச் சோ்ந்த விஜய், கணியம்பாடியை சோ்ந்த கலைச்செல்வன் ஆகிய 2 பேரையும் கைதனா். மேலும் லாரியுடன் ஒரு யூனிட் மணலையும் பறிமுதல் செய்தனா்.