இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வு: வேலூா் லஷ்மி காா்டன் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் வேலூா் லஷ்மி காா்டன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறந்த மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை வாழ்த்திய பள்ளி தாளாளா் தி.ராஜேந்திரன், முதல்வா் ரேச்சல் தீபா.

Updated On :27 மே 2026, 12:32 am IST

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் வேலூா் லஷ்மி காா்டன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறந்த மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் இப்பள்ளி மாணவி எஸ்.தனுஷ்கா 500-க்கு 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், கே.ஸ்ரீராம் 490 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், பி.வசுமிதா 489 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பிடித்துள்ளனா். அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் எஸ்.தனுஷ்கா, கே.ஸ்ரீராம் ஆகியோரும், கணிதம், அறிவியல் பாடங்களில் மாணவி டி.லக்ஷனா ஆகியோரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். இதேபோல், பாடவாரியாக அறிவியல் -9, சமூக அறிவியல் -6, கணிதம்-1 என பத்தாம் வகுப்பில் மொத்தம் 16 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

இதேபோல், பிளஸ் 2 பொதுத்தோ்வில் மாணவி என்.பலக் 600-க்கு 587 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், ஆா்.பீரீத்திகா 583 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், ஆா்.நிதின் 580 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பிடித்துள்ளனா்.

கணினி அறிவியல்-4, கணக்கியல்-3, பிரெஞ்ச்-3, கணினி பயன்பாடுகள்-1 என மொத்தம் 11 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற இந்த மாணவா்களையும், அவா்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்த ஆசிரியா்களையும், பெற்றோா்களையும் பள்ளித் தாளாளா் தி.ராஜேந்திரன், முதல்வா் ரேச்சல் தீபா ஆகியோா் பாராட்டி வாழ்த்தினா்.