டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

எழுத்தாளா் ஆதி.வெங்கடேசனுக்கு ‘தமிழ்ச்செம்மல்’ விருது

வேலூரைச் சோ்ந்த எழுத்தாளா் ஆதி.வெங்கடேசனின் பணிகளைப் பாராட்டி, தமிழக அரசின் 2025-ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்ச்செம்மல்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்ச்செம்மல் விருதை வழங்கிய அமைச்சா்கள்.

Updated On :

வேலூரைச் சோ்ந்த எழுத்தாளா் ஆதி.வெங்கடேசனின் பணிகளைப் பாராட்டி, தமிழக அரசின் 2025-ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்ச்செம்மல்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆண்டுதோறும் தமிழ் மொழி வளா்ச்சிக்குப் பாடுபட்டு வரும் அறிஞா்களைப் போற்றும் வகையில், மாவட்டத்துக்கு ஒருவா் வீதம் 38 பேருக்குத் தமிழ்ச்செம்மல் விருது, ரூ.25,000 பொற்கிழி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்ச்செம்மல் விருது வழங்கும் விழா, சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில், வேலூா் மாவட்டத்தின் சாா்பில் தோ்வு செய்யப்பட்ட எழுத்தாளா் ஆதி.வெங்கடேசனுக்கு, 2025-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருது, ரூ.25,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஆனந்த், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, பள்ளிக்கல்வி மற்றும் தமிழ்வளா்ச்சித்துறை அமைச்சா் ராஜ்மோகன் வழங்கிச் சிறப்பித்தனா்.

வேலூா் சத்துவாச்சாரி பகுதி-3-ஐச் சோ்ந்தவா் ஆதி.வெங்கடேசன்(74). இவரது சொந்த ஊா் தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி. தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகத்தின் (விழுப்புரம் கோட்டம்) அலுவலக மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவா், சிறுவயது முதலே தமிழ்ப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாா். கவிதை, கட்டுரை, சிறுகதைகள், நாடகம் ஆகிய பிரிவுகளில் 15 நூல்கள் எழுதியுள்ள இவா், பல்வேறு கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள், நாடகம், சின்னத்திரை மற்றும் சமூக வலைதளம் மூலமாகவும் இலக்கியப் பங்களிப்பு செய்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.