காய்கறி விற்பவருக்கு ரூ. 31 லட்சம் ஜிஎஸ்டி... பின்னணியில் பகீர் மோசடி!
காய்கறி விற்பனை செய்யும் கூலித் தொழிலாளிக்கு அதிர்ச்சி கொடுத்த ஜிஎஸ்டி பற்றி..

காய்கறி விற்கும் கூலித் தொழிலாளி - video crop
தெருவில் காய்கறி விற்பனை செய்யும் கூலித் தொழிலாளிக்கு ரூ. 31 லட்சம் ஜிஎஸ்டி வரிகட்ட நோட்டீஸ் வந்ததால் அவர் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வேலூர், குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வசீம். இவரது தந்தை மற்றும் தாய் ஆகியோர் பீடி வேலை செய்கின்றனர். வசீம் தள்ளு வண்டியில் தெருவில் காய்கறி விற்பனை செய்து வருகிறார்.
இதனிடையே கடந்த மாதம் வேலை வாங்கி தருவதாகக் கூறி அவரிடம் இருந்து பான் கார்டு மற்றும் வங்கிக் கணக்குகள் பெறப்பட்டு ஒடிபி என்ணை சிலர் வாங்கிய நிலையில் அவருக்கு கடந்த 12-ஆம் தேதி ஜிஎஸ்டி அலுவலகத்திலிருந்து ரூ. 7. 50 கோடி வர்த்தகம் செய்துள்ளதாகவும், அதற்காக ரூ. 30 லட்சத்து 92 ஆயிரம் ஜிஎஸ்டி வரி பாக்கி செலுத்த வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

காய்கறி விற்பனையாளருக்கு வந்த ஜிஎஸ்டி
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வசீம் இதுகுறித்து குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்திய நிலையில் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வசீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Rs. 31 lakh GST demand for a vegetable seller... a shocking scam uncovered!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



