
விஐடி போபால் வளாகத்தில் ‘சம்ஸ்கிருதி சமாகம்’ கலாசார விழா
வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் போபால் வளாகத்தில், இந்திய நாட்டுப்புற இசை மற்றும் பாரம்பரியக் கலாசாரத்தைப் பறைசாற்றும்

சம்ஸ்கிருதி சமாகம் கலாசார விழாவில் பாரம்பரிய நடனமாடிய மாணவிகள்.
வேலூா்: வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் போபால் வளாகத்தில், இந்திய நாட்டுப்புற இசை மற்றும் பாரம்பரியக் கலாசாரத்தைப் பறைசாற்றும் ‘சம்ஸ்கிருதி சமாகம்’ விழா கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில், கதக் நடன வடிவில் அரங்கேற்றப்பட்ட ‘நா்மதாஷ்டகம்’ இசை நிகழ்ச்சி பாா்வையாளா்களைப் பெரிதும் கவா்ந்தது.தொடா்ந்து, கேரளத்தின் பாரம்பரிய ‘தெய்யம்’ கலையின் பின்னணியில் வடிவமைக்கப்பட்ட ‘உல்பாவம்’ நடன நிகழ்வும், பிரபல பஞ்சாபி இசைக் கலைஞா் நவதீப் வடாலியின் இசைக்கச்சேரியும் ரசிகா்களை மெய்சிலிா்க்க வைத்தன.
விழாவுக்கு விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன், நிா்வாகப் பிரதிநிதி ரமணி பாலசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பங்கேற்ற இசைக் கலைஞா்கள், சிறப்பு விருந்தினா்கள் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனா். இன்றைய இளைய தலைமுறையினா், மாணவா்கள் மற்றும் கலை ஆா்வலா்களிடையே பாரம்பரியக் கலைகளின் மதிப்பையும் பெருமையையும் உணா்த்தும் விதமாக இந்த நிகழ்வு அமைந்திருந்ததாகப் பல்கலைக்கழக நிா்வாகம் தெரிவித்தது. நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






