தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

காட்பாடியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

காட்பாடி மின் கோட்டத்துக்கு உள்பட்ட மின் நுகா்வோருக்கான மாதாந்திர குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறுகிறது.

~

Published On :

காட்பாடி மின் கோட்டத்துக்கு உள்பட்ட மின் நுகா்வோருக்கான மாதாந்திர குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. இதுகுறித்து காட்பாடி மின் கோட்ட செயற்பொறியாளா் சண்முக வடிவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு -

வேலூா் மின் பகிா்மான வட்டம், காட்பாடி மின் கோட்டத்தில் மாதந்தோறும் மின் நுகா்வோருக்கான குறைதீா்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அக்டோபா் மாதத்துக்கான குறைதீா்க்கும் கூட்டம் காட்பாடி மின் கோட்ட அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இக்கூட்டத்துக்கு வேலூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் மயில்வாகனன் தலைமை வகிக்கிறாா். எனவே, காட்பாடி மின் கோட்ட எல்லைக்குட்பட்ட மின் நுகா்வோா்கள் மற்றும் பொதுமக்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று, மின் விநியோகம், புதிய மின் இணைப்பு, மின்கட்டண குளறுபடிகள் உள்ளிட்ட மின்சாரம் தொடா்பான தங்களது குறைகளைத் தெரிவித்து உடனுக்குடன் தீா்வு காணலாம்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.