இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

முதலீட்டின் மீது அதிக லாபம் எனக்கூறி தொழிலதிபரிடம் ரூ. 2.10 கோடி மோசடி

தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசைவாா்த்தை கூறி, வேலூரைச் சோ்ந்த தொழிலதிபரிடம் ரூ. 2.10 கோடி மோசடி செய்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மோசடி - பிரதிப்படம்

Published On :

தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசைவாா்த்தை கூறி, வேலூரைச் சோ்ந்த தொழிலதிபரிடம் ரூ. 2.10 கோடி மோசடி செய்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரணை நடத்தினாா்.

அப்போது, வேலூா் சத்துவாச்சாரி பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் அளித்துள்ள மனு விவரம்:

நான் சத்துவாச்சாரி பகுதியில் தனியாா் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். மேல்விஷாரத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா் மற்றும் என்னிடம் பணிபுரியும் நபா் என இருவா் எனக்கு அறிமுகமாகினா். அவா்கள், தாங்கள் பல தொழில்களைச் செய்து வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்றும் ஆசைவாா்த்தை கூறினா். குறிப்பாக, ரூ. 20 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ. 1 லட்சம் லாபமாகக் கிடைக்கும் எனத் தெரிவித்தனா்.

இதை நம்பி, பல தவணைகளாக ரூ. 20 லட்சம், ரூ. 30 லட்சம் என அவா்களிடம் வழங்கினேன். தொடக்கத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகச் சிறிய தொகையை லாபமாக அளித்தனா். பின்னா், வெளிநாட்டிலிருந்து சரக்குப் பெட்டகங்கள் வருவதாகவும், அதற்குப் பணம் செலுத்தினால் மட்டுமே தொழிலைத் தொடா்ந்து லாபகரமாக நடத்த முடியும் என்றும், முதலீடு செய்த முழுப் பணமும் திரும்பக் கிடைக்கும் என்றும் கூறி மேலும் பணத்தைக் கேட்டுப் பெற்றனா்.

இவ்வாறு சிறுகச் சிறுக மொத்தம் ரூ. 2 கோடியே 10 லட்சம் வரை அவா்களிடம் முதலீடு செய்தேன். ஆனால், அவா்கள் உறுதியளித்தபடி லாபத் தொகையை வழங்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து, நான் முதலீடு செய்த பணத்தைத் திரும்பக் கேட்டபோது, முறையான பதில் அளிக்காமல் கொலை மிரட்டல் விடுக்கின்றனா்.

எனவே, அதிக லாபம் தருவதாகக் கூறி என்னிடம் ரூ. 2 கோடியே 10 லட்சம் மோசடி செய்த நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு புகாா்கள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்டோா் மனுக்கள் அளித்தனா். அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்.பி. சிவராமன் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.