திருப்பூர், அக். 21: கடுமையான நூல் விலையேற்றம் மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்களின் கூலி உயர்வு, வசூல் தவணை ரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பின்னலாடைகள் உற்பத்திச் செலவு பெருமளவில் அதிகரித்துள்ளது. ஆனால், ஏற்றுமதியாளர்களுக்கு அளிக்கும் "பேக்கிங் கிரெடிட்' கடன் விகிதத்தை உயர்த்த வங்கிகள் தயக்கம் காட்டுவதால் சிறு, குறு பின்னலாடை உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கடன்களை உயர்த்த வங்கிகள் தயக்கம்
பெருமளவிலான பருத்தி ஏற்றுமதியாலும், பதுக்கல் காரணமாகவும் உள்நாட்டில் பஞ்சு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நூல் விலையும் வரலாறு காணாத அளவில் உயர்ந்து கொண்டுள்ளது. அனைத்து ரக நூல்களின் விலையும் ஒரே ஆண்டில் 47 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
நூல் விலையேற்றம் மற்றும் மின் கட்டணம், பெட்ரோலியப் பொருட்கள், மூலப் பொருட்கள், ஜாப் ஒர்க் நிறுவனங்களின் கூலி என அனைத்து நிலைகளிலும் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதனால், திருப்பூரில் பின்னலாடை உற்பத்திச் செலவு சுமார் 45 சதவீதம் அதிகரித்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், பெருமளவில் உயர்ந்துள்ள உற்பத்திச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, பேக்கிங் கிரெடிட் கடன்களை உயர்த்தி வழங்க வங்கிகள் தொடர்ந்து தயக்கம்காட்டி வருவதாக பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்றுமதியாளர்களுக்கு கடும் நிதி நெருக்கடி
ஏற்றுமதி வர்த்தகத்துக்கான பின்னலாடைகளை தடையின்றி உற்பத்தி செய்து அனுப்ப ஏற்றுமதியாளர்களுக்கு வங்கிகளால் வழங்கப்படும் கடன் "பேக்கிங் கிரெடிட்' எனப்படுகிறது. ஏற்றுமதிக்கு முந்தைய (ல்ழ்ங்-ள்ட்ண்ல்ம்ங்ய்ற்) மற்றும் பிந்தைய கடன் (ல்ர்ள்ற்-ள்ட்ண்ல்ம்ங்ய்ற்) என இரு வகை உள்ளது. இக்கடனுக்கான தொகையை ஏற்றுமதியாளர்களின் வரவு-செலவு நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டோ அல்லது வரப் பெற்றுள்ள ஆர்டர்களைப் பொறுத்தோ வங்கிகள் நிர்ணயிக்கும்.
அதனடிப்படையில், பழைய நடைமுறை விதிகளை வைத்து வங்கிகள், பேக்கிங் கிரெடிட் கடனுக்கான தொகையை ஒதுக்கீடு செய்கின்றன.
ஆனால், முழு உற்பத்திக்கான செலவுகளுக்கும் அத்தொகை போதாததால் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு பெருமளவில் நிதி நெருக்கடி ஏற்படுகிறது என்கிறார், பின்னலாடை ஏற்றுமதியாளரும், திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரித் தலைவருமான ராஜா எம்.சண்முகம்.
உற்பத்தியை தொடர்வதில் சிக்கல்
மேலும் அவர் கூறுகையில், பின்னலாடை உற்பத்திக்கான செலவு உயர்ந்துள்ளதால் அதற்கேற்ப பேக்கிங் கிரெடிட் கடன் தொகையையும் உயர்த்தி வழங்க வலியுறுத்தப்பட்டும், வங்கிகள் தயக்கம் காட்டுகின்றன.
இதனால், ஜாப் ஒர்க் நிறுவனங்களை நம்பி உற்பத்தி செய்யும் சிறு, குறு பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களைத் தொடர்ந்து பெரிய ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
உற்பத்திச் செலவுக்கு ஏற்ப கடன் தொகையை வங்கிகள் உயர்த்தி வழங்காதபட்சத்தில் உற்பத்தி தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டு தொழில் பாதிக்கப் படுவதுடன், அனைத்து ஜாப் ஒர்க் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும். வங்கிகளுக்கும் பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படும். இதைத் தவிர்க்க, உற்பத்திச் செலவுகளுக்கு ஏற்ப பேக்கிங் கிரெடிட் கடன் தொகையை உயர்த்தி, தொழில்களைப் பாதுகாக்க வேண்டியது வங்கிகளின் கடமை என்றார்.
கடனை உயர்த்தி வழங்க அதிகாரம் இல்லையாம்
திருப்பூரிலுள்ள ஓவர்சீஸ் வங்கியாளர்களிடம் கேட்டபோது, பேக்கிங் கிரெடிட் கடனுக்கான விண்ணப்பங்கள் மும்பை, சென்னையிலுள்ள வங்கியின் உயர் அலுவலக ங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு நிர்ணயிக்கப்படுகிறது.
உற்பத்திச் செலவுகள் தற்போது அதிகரித்திருப்பதை அடுத்து, அதற்கேற்ப பேக்கிங் கிரெடிட் கடன் தொகையை உயர்த்தி வழங்குவதற்கான அதிகாரம் இல்லை. ஏற்றுமதியாளர்களின் தேவைகள் குறித்து உயரதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி
பிரசாரத்தை நிறைவு செய்தார் இபிஎஸ்!
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
சென்னையில் விஜய் சாலைவலம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

