வாடிக்கையாளர்களைக் குழப்பும் கோவை "ஆவின்'

கோவை, டிச. 3: கோவை ஆவின் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படும் 250 மிலி பால் பாக்கெட்களில், 500 மி.லி, 1000 மி.லி என அச்சிடப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.  ÷கோவை ஆவின் மூலம், பால
Updated on
1 min read

கோவை, டிச. 3: கோவை ஆவின் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படும் 250 மிலி பால் பாக்கெட்களில், 500 மி.லி, 1000 மி.லி என அச்சிடப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

 ÷கோவை ஆவின் மூலம், பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து நாளொன்றுக்கு 2.40 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 1.65 லட்சம் லிட்டர் பால் நிலைப்படுத்தப்படுத்தப்பட்டு 250 மிலி, 500 மிலி பாக்கெட்களாக விற்பனை செய்யப்படுகிறது.

 எஞ்சிய பால் வெளி மாவட்ட விநியோகத்துக்கும், பால் பொருள்கள் தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது.

 ÷கோவை ஆவின் நிறுவனத்தின் மூலமாக நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை பாக்கெட்), பசும்பால் (இளஞ்சிவப்பு பாக்கெட்) என இரு வகையான பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

 ÷இதில் 250 மிலி பாக்கெட்களின் விற்பனையை நிறுத்தப்போவதாக பேச்சு இருந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, 500 மி.லி என அச்சிடப்பட்ட பாக்கெட்களில் 250 மி.லி பால் விற்பனை செய்யப்பட்டது. சனிக்கிழமையில் இருந்து 1000 மிலி என அச்சிடப்பட்ட பாக்கெட்டில் 250 மி.லி பால் விற்பனை செய்யப்படுகிறது.

 ÷அதுவும் பதப்படுத்தப்பட்ட நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு பாக்கெட்) என்ற பாக்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால், கோவை ஆவினில் இருந்து அத்தகைய பால் விற்பனை ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டது.

 ÷பால் விலை உயர்வு அமல்படுத்தப்பட்ட பிறகும்கூட, பழைய விலை அச்சிடப்பட்ட பாக்கெட்களில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பாக்கெட்கள் என்பதால், அதே பாக்கெட்களைப் பயன்படுத்துகிறோம் என்று ஆவின் நிறுவனம் கூறினாலும், பொட்டலப் பொருள்கள் சட்டத்தின்படி புதிய விலையை அச்சிட வேண்டும். இதனால், ஆவின் பூத் அல்லாத மளிகைக் கடைகளில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான விலைக்கு பால் விற்பனை செய்யப்படுகிறது. இது வாடிக்கையாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

 ÷"250 மி.லி பால் பாக்கெட்கள் இருப்பு இல்லாத காரணத்தால் வேறு பாக்கெட்களில் விற்பனை செய்து வருகிறோம். இதுகுறித்து விளம்பரம் செய்துள்ளோம்' என்றும் ஆவின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

 ÷ஆனால், "எடையளவு மாறுதல் குறித்து சம்பந்தப்பட்ட பொட்டலப் பொருளில்தான் அச்சிட வேண்டும்' என்று தொழிலாளர் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.÷எடையளவு மற்றும் பொட்டலப் பொருள்கள் சட்டப்படி, பொட்டலத்தின் மீது அச்சிடப்பட்ட விவரங்கள் உள்ளே இருக்கும் பொருளுக்குச் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். அதற்கு மாறாக இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட விற்பனையாளருக்கு அபராதம் விதிக்க முடியும் என்றும், தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ÷

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com