நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

காரமடையில் தாசர்களுக்கு பக்தர்கள் படையல் அர்ப்பணம்

மேட்டுப்பாளையம், அக். 8: வைணவக் கோவில்களில் பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாதர் திருக்கோவிலில் புரட்டாசி 4வது சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந

Updated On :29 டிசம்பர் 2023, 12:15 am IST

மேட்டுப்பாளையம், அக். 8: வைணவக் கோவில்களில் பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாதர் திருக்கோவிலில் புரட்டாசி 4வது சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வணங்கி, தாசர்களுக்கு படையலிட்டனர் (படம்).

 ÷இத் திருக்கோவிலில், புரட்டாசி மாதத்தில் வரும் 5 சனிக்கிழமைகளையும் பக்தர்கள் விரதமிருந்து சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். நேற்று 4வது புரட்டாசி சனிக்கிழமை விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு அரங்கநாதப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், 5 மணிக்கு திருக்கோவில் நடைத்திறப்பும் நடைபெற்றன.

 ÷அதன் பின்னர், அரங்கநாதப் பெருமாள் உட்பிரகாரத்தை வலம்வந்தார்; ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருக்கல்யாண மண்டபத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அதிகாலை முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து அரங்கனை தரிசித்தனர்.

 ÷தரிசனத்திற்குப் பின்னர், திருக்கோவிலை வலம் வந்த பக்தர்கள், கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்த ஆயிரக் கணக்கான தாசர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகளைப் படையலிட்டு, அவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.