ஈரோடு, அக். 8: உள்ளாட்சித் தேர்தலுக்குப் பயன்படுத்தும் வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணியை வரும் 10-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி வி.கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
÷ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்டமாக வரும் 17-ம் தேதியும், 2-ம் கட்டமாக 19-ம் தேதியும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி ஈரோடு பெரியார் நகரில் உள்ள மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில் நடந்து வருகிறது. இப்பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான வி.கே.சண்முகம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
÷அப்போது அவர் கூறியது: ஈரோடு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெறறு வருகிறது.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மஞ்சள் நிறத்திலும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பச்சை நிறத்திலும், ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இளஞ் சிவப்பு நிறத்திலும், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வெள்ளை மற்றும் 2 உறுப்பினர் பதவியிருந்தால் நீலம் நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு வருகிறது.
÷வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ள மாநகராட்சி மேயர் பதவி, நகராட்சித் தலைவர் பதவி மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சிவப்பு நிறத்திலும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு வெள்ளை நிறத்திலும் இயந்திரத்தில் ஒட்டுவதற்கான சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை வரும் 10-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
÷ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜேந்திரபிரசாத், என்.சிவக்குமார் (வளர்ச்சி), கோட்டாட்சியர் ஆர்.சுகுமார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

26.7.1976: தி.மு.க. அரசு மீதுள்ள புகார்கள் குறித்து விரைவில் கிரிமினல் வழக்கு வரும்

போதையில்லா தமிழகம் உருவாக்க விழிப்புணா்வு நடைப்பயணம்

வியக்க வைக்கும் வெட்டாறு பாலம்!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் குளிர்ச்சியடைய...
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


